மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதை தடுக்க வரி: சுவிஸ் அமைப்பு ஒன்று யோசனை
மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக, இனிப்புகள் மீது வரி விதிக்க சுவிஸ் அமைப்பு ஒன்று யோசனை தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதை தடுக்க வரி
மக்களுடைய உடல் நலனைக் கருதி, அதிகம் இனிப்பு சாப்பிடுவதைக் குறைப்பதற்காக, இனிப்பு பானங்கள் மற்றும் உணவுகள் மீது வரி விதிக்கலாம் என சுவிஸ் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பு ஒன்று யோசனை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆல்கஹால் மற்றும் புகையிலை மீதான வரியையும் அதிகரிக்க இந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
அதாவது, இந்த பொருட்கள் மீது வரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும். ஆகவே, அவற்றை வாங்குவது மக்களுக்கு கடினமாகிவிடும், அதனால் மக்கள் உடல் நலனுக்கு நன்மை ஏற்படும் என்பதாலேயே அவற்றின் மீது வரி விதிக்க அந்த அமைப்பு யோசனை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |