ஒரே படகில் 230 புலம்பெயர்ந்தோர்: முந்தைய சாதனையை முறியடித்த எண்ணிக்கை
ஒரே படகில் 230 புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஜூலை மாதம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், ஒரே படகில் 165 புலம்பெயர்வோர் பயணித்த விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தற்போது, ஒரே படகில் 230 புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
ஒரே படகில் 230 புலம்பெயர்வோர்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த இருதரப்பும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்களும் புதிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளார்கள்.

பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை, சிறுபடகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் பேராக ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்பிவந்த ஆட்கடத்தல்காரர்கள், இப்போது ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் பயணிக்கும் பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளது சமீபத்தில் தெரியவந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை இதுவரை இல்லாத அளவில், மிகப்பெரிய படகொன்று பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளது.
ஆம், ஒரே படகில் 230 புலம்பெயர்வோர் இன்று பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.

சமீபத்தில் 170க்கும் அதிகமான புலம்பெயர்வோர் பயணித்த படகொன்றின் எஞ்சினில் தீப்பற்றிய விடயம் நினைவிருக்கலாம்.
ஆக, இப்படி ஒரே படகில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்வோர் பயணிப்பது, ஆபத்தையும் அதிகப்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |