பார்ட்டிகள் மூலம் கொரோனா பரவினால் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்: கனடா நீதிபதி அதிரடி
கனடா நீதிபதி ஒருவர் பார்ட்டிகள் மூலம் கொரோனா பரவினால் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
யார்க் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி பேராசிரியரான Lisa Dufraimont, ஒரு சட்டவிரோத செயல் மரணத்தை உண்டாக்குமானால் அது கொலைக்குற்றமாக கருத்தில் கொள்ளப்படும், அதன்படி பார்த்தால், Ellen Gordon என்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றார்.
அதாவது, Mohammad Movassaghi என்பவர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பார்ட்டி ஒன்று நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். நீதிபதியான Ellen Gordon, அவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும், 5,000 டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Mohammad வீடு ஒன்றில் 78 பேருடன் பார்ட்டி ஒன்றை நடத்தினார், ஆனால், பொலிசார் சென்று பார்க்கும்போது அங்கு நடந்த விடயங்கள் இரவு விடுதி போல் அந்த இடத்தை காட்சியளிக்க வைத்திருந்தன.
ஆகவே, தீர்ர்ப்பளித்த நீதிபதியான Ellen, அது ஒரு பார்ட்டி அல்ல, அது ஒரு குற்றச்செயல் என்று கூறி, தனது பாட்டிமார்களுக்கு கொரோனாவைக்கொண்டு பரப்பும் வகையில் பார்ட்டியில் பங்குகொண்டவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன், உங்கள் பார்ட்டியில் பங்கேற்ற யாரோ ஒருவர் கொரோனா தொற்றி உயிரிழந்துவிட்டால், என்னைப் பொருத்தவரை நீங்கள் செய்தது கொலை, உங்கள் பார்ட்டிக்கு வந்த யாரோ ஒருவர் கொரோனா தொற்றி, அதை தன் பாட்டிக்கு கடத்தியிருந்தால், என்னைப் பொருத்தவரை நீங்கள் செய்தது கொலைக்குற்றம் என்று கூறியிருந்தார் நீதிபதி.
அந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதத்தில்தான் தற்போது யார்க் பல்கலைக்கழக
சட்டக்கல்லூரி பேராசிரியரான Lisa Dufraimontம், பார்ட்டிகள் மூலம் கொரோனா
பரவினால் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், நீதிபதி Ellen
Gordon வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.