Job: ரூ. 30,000 சம்பளம்.., இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்
இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள், தமிழகத்தில் 17 பணியிடங்கள் என மொத்தம் எக்சிகியூடிவ் பணியிடத்திற்கான 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி
கல்வி தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்
இவ்வேலைக்கு சம்பளமாக மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி திகதி
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு 29.10.2025 கடைசி திகதி ஆகும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணமாக அனைத்து பிரிவினருக்கும் ரூ.750 செலுத்த வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |