சற்றுமுன் உருவான பெங்கல் புயல்.., 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் சரியாக 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
பெங்கல் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ 29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |