தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்- வானிலை மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால் வட தமிழகத்தில் 29ஆம் திகதி அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சனிக்கிழமை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், வட தமிழகத்தில் 30ஆம் திகதி ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |