பிரான்சில் பல இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில், பல்வேறு இடங்களுக்கு வெப்பம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
பிரான்சின் பல பகுதிகளில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துவருகிறது.
கடந்த வாரம், திராட்சைத் தோட்டங்களும், புதர்க்காடுகளும் நிறைந்த Aude என்னுமிடத்தில் காட்டுத்தீயால் 16,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமானது.
பிரான்சின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம், பிரான்சின் 12 பகுதிகளுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 41 இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு, வெப்பம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை என்னும் ஒரு விடயம் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுவரை எட்டு முறை மட்டுமே பிரான்சுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |