Storm Arwen: பிரித்தானியாவின் ஒரு சில இடங்களுக்கு ரெட் அலர்ட்
பிரித்தானியாவில் 100 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் பல பகுதிகள் பனி புயலால் தாக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அந்தவகையில் இன்று அதிகாலை 1 மணி முதல் பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் பனிப் பொழிவு தொடங்கியுள்ளது.
பூமியின் தென் துருவத்தில் ஏற்பட்ட காற்று அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிர் காற்று இன்னும் 3 நாட்களுக்கு பிரித்தானியாவை தாக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மூன்று நாட்கள் பல இடங்களில் 6 இஞ்ச் அளவு பனிப் பொழிவு இருக்கும். மேலும் சில இடங்களில் மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் வேறு சில இடங்களில் கடும் வெள்ளம் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
100 மீற்றர் வீசும் காற்றால் மரங்கள் முறிந்து விழக்கூடும் என்பதால் புயல் சமயத்தில் மக்கள் யாரும் மரங்கள் கீழே நிற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் பிரித்தானியா முழுவதும் Arwen காற்று புயல் தீவிரமாகி வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வட கிழக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளை புயல் ஊடறுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.