இலங்கை-இங்கிலாந்து போட்டியில் திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து! தெரியவந்த காரணம்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, சிவப்பு நிற பந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் மாறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணி இலங்கையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இலங்கை அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இந்நிலையில், இந்த இரண்டு போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மெண்டிஸ் தனது 10-வது ஓவரை வீசினார்.
அப்போது ஜானி பேர்ஸ்டோவ் மெண்டிஸ் ஓவரில் சிக்ஸ் அடித்தார். அந்த பந்து திடீரென்று வெள்ளை நிறத்துக்கு மாறியது.
இந்த வீடியோ மட்டுமே சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது அதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது.
மைதானத்தில் கோடு போடுவதற்காக வைத்திருந்த பெயிண்ட்டில் பந்து விழுந்ததால் பந்து சிவப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறியிருக்கிறது. இதன் பிறகு புதிய சிவப்பு பந்து மூலம் ஓவர்கள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.