தலைமுடியைப் பிடித்து இழுத்த இங்கிலாந்து வீரர்! Red Card கொடுத்து வெளியேற்றிய நடுவர்..பரபரப்பான ஆடுகளம்
எவர்டன் வீரர் மைக்கேல் கீன் எதிரணி வீரரின் தலைமுடியைப் பிடித்து இழுத்ததால், கள நடுவரால் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
மைக்கேல் கீன்
ஹில் டிக்கின்சன் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், எவர்டன் (Everton) மற்றும் வோல்வ்ஸ் (Wolves) அணிகள் மோதின.
Image: Getty
எவர்டன் தரப்பில் மைக்கேல் கீன் (Michael Keane) 17வது நிமிடத்தில் கோல் அடித்தார். மாடியஸ் மானே (Mateus Mane) 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் போட்டி 1-1 என்ற டிராவில் முடிந்தது.
ஆனால், இந்தப் போட்டியில் எவர்டன் வீரர்கள் இருவர் Red Card கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது பரபரப்பானது.
Image: Getty
வெளியேற்றம்
மைக்கேல் கீன் எதிரணி வீரர் டோலு அரோகோடேரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். இதனால் VAR மதிப்பாய்வு செய்யப்பட்டது.
பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திரமான அவருக்கு Red Card வழங்கப்பட்டது. அதேபோல் சக அணி வீரர் ஜாக் கிரீலிஷ் (Jack Grealish), இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். இதனால் எவர்டன் அணி எவர்டன் அணி 9 வீரர்களுடன் விளையாடியது.
Image: X
பிரீமியர் லீக் வரலாற்றில், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகவும் அசாதாரணமான வெளியேற்றமாக இது கருதப்படுகிறது.
Image: Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |