ரெட் லைட் தெரபியில் கிடைக்கும் நன்மைகள்!
ரெட் லைட் தெரபி மற்றும் சிவப்பு ஒளி சிகிச்சை என்பது சருமத்தை அழகை மேம்படுத்த உதவுகிறது.
இது குறைந்த அளவிலான லேசர் சிகிச்சை முறை என்று அழைக்கப்படுகிறது.எனவே இது சருமத்தை எந்த அளவிலும் தீங்கு விளைவிக்காது.
இது உடல் வழியை குறைக்கவும் உடலின் செல்லுலார் செயல்பாட்டை மேம்படுத்துவம் இது பயன்படுகிறது.
ஆர்த்ரிட்ஸ் போன்ற மூட்டு வலி பிரச்சினைகள், இரத்த ஓட்ட அதிகரிப்பு, காயங்களை ஆற்றுதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைத்தல் போன்ற பலவித நன்மைகள் இந்த சிவப்பு ஒளி சிகிச்சை முறையில் கிடைக்கிறது.
ரெட் லைட் தெரபியால் கிடைக்கும் நன்மைகள்
முடக்கு வாதம் மற்றும் மூட்டு விறைப்பு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.இது மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.
இந்த சிகிச்சையின் மூலம் வயதான காலங்களில் ஏற்படும் தேய்மானம், கழுத்து மற்றும் முதுகுவலி போன்ற விஷயங்களை சரி செய்ய உதவுகிறது.
இந்த சிகிச்சையில் ஏற்படும் வெப்பம் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு வாஸ்குலர் கோளாறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
healthline
மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சரும ஆரோக்கியம், நரம்பியல் ஆரோக்கியம், செரிமானம் போன்ற விஷயங்கள் நன்றாக நடைபெற உதவுகிறது.
இதன் மூலம் உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், வயதாகுதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய முடியும். மேலும் சரும வடுக்கள், காயங்கள், முடி உதிர்தல், கடுமையான முகப்பருக்கள், மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை போக்க உதவுகிறது.
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை நம் உடலில் உள்ள செல்களை திறம்பட செயல்படுத்த உதவுகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
குளுக்கோஸை ஆற்றலாக மாற்றி திறனை மேம்படுத்துகிறது.
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். இது உடலில் இயற்கையாக மெலடோனின் ஹார்மோன் வெளியீட்டை அதிகரிக்கிறது. எனவே நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |