சிவப்பு நிற கடவுச்சீட்டு... இந்த நாடுகளில் அனுமதி மறுக்கப்படலாம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானிய மக்களில் தற்போதும் சிவப்பு நிற கடவுச்சீட்டு பயன்படுத்தி வருவோர், கோடை காலத்தில் வெளிநாடு செல்ல திட்டமிடும் முன்னர், தீர விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுழைவு விதிகள் மாறுபடலாம்
ஒவ்வொரு நாடுகளுக்குமான நுழைவு விதிகள் மாறுபடலாம் என்பதால், சிவப்பு கடவுச்சீட்டுகள் பயணிக்க சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாமல் போகலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
@getty
வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் பயணிகள், தாங்கள் புறப்படும் திகதியில் இருந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கள் கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இது பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் பொதுவான விதியாகும்.
இதை கவனிக்காமல் பயணப்படும் பயணிகள் விமான நிலையத்திலேயே சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும், மூன்று மாத விதிகளை பின்பற்றுகின்றனர்.
அதாவது, நீங்கள் புறப்படும் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு மேல் அந்த கடவுசீட்டு செல்லுபடியானாலும் போதுமானது. ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளில் இருந்து நீங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்பட நேர்ந்தால், உங்கள் கடவுச்சீட்டுகள், நீங்கள் பயணப்படும் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு மேல் செல்லுபடியாக இருந்தால் போதுமானது.
சிவப்பு கடவுச்சீட்டு பயன்பாட்டாளர்கள்
ஆனால் பழைய ஐரோப்பிய ஒன்றிய - பிரித்தானிய கடவுச்சீட்டு கைவசம் வைத்திருப்பவர்களுக்கு இந்த மூன்று மாத விதிகள் பாதிப்பை ஏற்படுத்தாது. உலகில் மொத்தம் 70 நாடுகள் இந்த 6 மாத விதிகளை பின்பற்றுகிறது.
@getty
41 நாடுகள் மூன்று மாத விதிகளை பின்பற்றுகிறது. மேலும், பிரித்தானியாவில் தற்போது அமுலில் உள்ள சிவப்பு கடவுச்சீட்டுகள் மிக விரைவில் காலாவதியாக இருக்கிறது.
இதனால், கோடைகாலத்தில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், உங்கள் கடவுச்சீட்டுகளை சரிபார்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக சிவப்பு கடவுச்சீட்டு பயன்பாட்டாளர்கள், 6 மாத விதிகளை பின்பற்றும் 70 நாடுகளுக்கு தற்போது செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |