சிவப்பரிசி புட்டு செய்து சாப்பிடுங்க...உடல் சக்தி அதிகரிக்குமாம்
சிவப்பரிசி எப்பொழுதுமே சத்து மிக்கதுதான். அதிர் நார்ச்சத்து, புரதச்சத்து என்பன அதிகமாக உள்ளது. அதுமாத்திரமின்றி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது சிவப்பரிசி.
தேவையான பொருட்கள்
சிவப்பரிசி மா - 4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
image - Yummy Tummy Aarthi
செய்முறை
முதலில் பாத்திரமொன்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
அதன்பின்னர் இன்னொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவைப் போட்டு அதில் உப்பு நீரை விட்டு, புட்டு மா பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
அதற்கடுத்ததாக, புட்டு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, சிறு மூடியை வைத்து மூடவும்.
அதன்பின்னர் புட்டு குழாயில் முதலில் சிறிது புட்டு மாவைப் போட்டு, பின்னர் அதன் பின்னர் துருவிய தேங்காயைப் போட்டு பின்னர் மறுபடியும் புட்டு மாவைப் போட்டு குழாயை நிரப்பவும்.
அதன்பின்னர் குழாயை புட்டு பாத்திரத்தின் மீது வைத்து 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும். அதன்பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாற வேண்டும்.
image - Curry Trail