சருமம் முதல் முடி வரை: ஏராளமான நன்மையை அள்ளித்தரும் Red Wine
ஒரு சோர்வான நாளில் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மிதமான அளவில் ஒயின் குடிப்பது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா?
சிவப்பு ஒயின் குடிப்பதால் நல்ல தோல் மற்றும் முடி கிடைக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்தது.
சிவப்பு ஒயின் என்பது திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தோலை இளமையாகவும், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளன.
எனவே சிவப்பு ஒயின் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு எவ்வாறு உங்களுக்கு உதவுகிறது என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
ஆரோக்கியத்திற்கான நன்மைகள்
-
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
- உடல் பருமனை தடுக்கிறது
- மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
- புற்றுநோயைத் தடுக்கலாம்
- முன்கூட்டிய முதுமையைத் தடுக்கிறது
- முகப்பருவை குறைக்கிறது
- சருமத்தை பளபளப்பாக்கும்
- அடர்த்தியான முடியை ஊக்குவிக்கிறது
- பொடுகை குறைக்கிறது
- இறந்த சரும செல்களைப் பிரித்தெடுக்கும்
ஸ்க்ரப்
சர்க்கரை ஒரு ஸ்பூன் மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் ரெட் ஒயின் சேர்க்கவும். பின் அதை முகத்தில் தடவி கழுவலாம்.
டோனர்
சுத்தமான பருத்தி துணியில் சிவப்பு ஒயினில் நனைத்து, அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கவும்.
சிவப்பு ஒயின் குடிக்க சிறந்த நேரம் எது?
சிவப்பு ஒயின் நன்மைகளைப் பெற, இரவு உணவின் போது அல்லது அதற்கு முன் குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் இதை குடிப்பதை தவிர்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |