எந்தவொரு ஸ்மார்ட்போனும் வழங்கிடாத புதிய அம்சம்: ரெட்மேஜிக் 9 ப்ரோ சிறப்பம்சங்கள் மற்றும் விலை
ரெட்மேஜிக் நிறுவனம் தங்களது பிளாக்ஷிப் மாடலான ரெட்மேஜிக் 9 ப்ரோ மாடலை சீனாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
ரெட்மேஜிக் 9 ப்ரோ
ரெட்மேஜிக் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மேஜிக் 9 ப்ரோ மற்றும் ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ரெட்மேஜிக் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான இந்த ஸ்மார்ட்போன் செயல்திறன் வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8ஜென் 3 பிராசஸரை கொண்டுள்ளது.
இத்துடன் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் கொடுத்திடாத வகையில் அதிகபட்சமாக 24 ஜி.பி ரேம், மற்றும் 1 டி.பி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் மற்றும் விலை
ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ரெட்மேஜிக் ஓ.எஸ் 9ல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP அன்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மேஜிக் 9 ப்ரோ: 6500mah பேட்டரி + 80w சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ: 5500mah பேட்டரி + 165 w சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மேஜிக் 9 ப்ரோ இந்திய ரூபாய் மதிப்பில் 52, 270 ரூபாய்க்கு, ரெட்மேஜிக் 9 ப்ரோ பிளஸ் 65, 341 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளது.
ரெட்மேஜிக் நிறுவனத்தின் இந்த ஃபிளாக்ஷிப் மாடல் நவம்பர் 28ம் திகதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |