பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தீப்பற்றி எரிந்த வீடியோ வைரல்! இப்படி செய்யாதீங்க உஷார்
பிரபல நிறுவனத்தின் ஸ்மோர்ட்போன் தீப்பற்றி எரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.
சமீபத்தில் சீனாவில் Redmi Note 11T Pro செல்போன் வெடித்துள்ளது, இந்த சம்பவத்தில் யாரும் இறக்கவில்லை. பகிரப்பட்ட வீடியோவில், தொலைபேசியின் திரை மற்றும் பின் பேனல் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
திரைக் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அதே நேரத்தில், பின் பேனலில் உள்ள கெமரா தொகுதியின் சில பகுதியைத் தவிர அனைத்தும் எரிந்து போய்விட்டன.
Redmi Note 11T Pro Blast in china.https://t.co/ZLmbTHOxwb#Redmi #RedmiNote11TPro #China pic.twitter.com/rlrbeWD0DW
— Piyush Bhasarkar (@TechKard) September 13, 2022
போனில் தீப்பிடித்ததற்கு முக்கிய காரணம்
பெரும்பாலான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் போனை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் தவறுகளால் நிகழ்கின்றன. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால், போனின் பேட்டரி சூடாகி விடுகிறது. இதனால் பேட்டரி வெடித்துவிடும்.
பல நேரங்களில் பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோனின் அசல் சார்ஜருக்குப் பதிலாக வேறு சில தொலைபேசிகளின் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் செய்கிறார்கள். இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.