பயணங்களுக்கு கட்டுப்பாடு... கட்டாய பரிசோதனை: தீவிர கண்காணிப்பில் பிரித்தானியாவின் முக்கிய நகரம்
ஆக்ஸ்போர்டு நகர மக்கள் தங்கள் பயணங்களை குறைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 30 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாய கொரோனா சோதனைக்கு உட்படவும் கோரியுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு நகரில் திடீரென்று கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை முதல் தீவிர கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவர நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களை நகர நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. ஆக்ஸ்போர்டு மட்டுமின்றி, வட மேற்கு, பெட்ஃபோர்ட் மற்றும் பர்மிங்காம் முழுவதும் இதே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இங்கிலாந்தில் 14 வது மிக உயர்ந்த தொற்று விகிதமானது ஆக்ஸ்போர்டில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக சுகாதார அமைச்சர் லார்ட் பெத்தேல் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் புதிதாக 35,707 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மூன்றாவது அலை மற்றும் ஜனவரி 23 முதல் பதிவு செய்யப்பட்ட அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.