வெறும் 7 நாளில் உடல் எடையைக் குறைக்கலாம்... இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் போதும்
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள்.
ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனை எப்படியாவது விரைவில் குறைத்தே ஆகவேண்டும் என்று கடும் முயற்சிகளை செய்து போராடுவார்கள்.
நீங்கள் நினைத்தபடி 7 நாட்களில் எடையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உணவு முக்கிய பங்காற்றுகிறது. அதனால் நீங்கள் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என்பன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ளவேண்டும். ஏனெனில் நிறைய தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.
எடைக் குறைய வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாடு இருப்பது போல உடற்பயிற்சியும் வேண்டும். குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடம் வரை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
உடலுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லை என்றாலும் எடை அதிகரிக்கும். ஏனெனில் தூக்கமில்லாமல் போன பசி ஏற்படும், அந்த நேரத்தில் உண்ணும் போது இன்னும் எடை அதிகரிக்கும்.
எடை அதிகரிப்பதற்கு உடல் மட்டுமல்ல மனதும் ஒரு காரணம் தான். ஏனெனில் மன அழுத்தம் ஏற்படும் போது அதிகம் சாப்பிடுவீர்கள், அதனால் யோகா, தியானம் என்பவற்றை செய்து மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.