இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தால் கூட உஷாரா இருங்க... உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என அர்த்தமாம்!
Stress
Fever
Immunity
Joint Pain
Cold
By Kishanthini
இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியமானது ஆகும்.
அதை எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால்அதிகரிக்கலாம் என தேடி தேடி சாப்பிட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை சற்றும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
அப்படி நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டால் உடலில் பல பிரச்சினைகள் உருவெடுத்து நம் உயிருக்கே உலை வைத்து விடும்.
அந்த வகையில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை இருப்பதை என்பதை காட்டும் சில அறிகுறிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முதல் அறிகுறி மன அழுத்தம். தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்கிறீர்கள் எனில் அதை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையெனில் இரத்ததின் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்துவிடும். இதுதான் நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.
- வெள்ளை சிவப்பு அணுக்கள் குறைந்துவிட்டது எனில் நோய் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறையக் குறைய உடலின் ஆற்றலும் குறையும். இதனால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இரவு போதுமான தூக்கம் தூங்கியிருந்தாலும் பகலிலும் சோர்வாகவும், தூக்கம் கண்களில் இருந்துகொண்டே இருக்கும். தூங்கலாமா என உடல் ஏங்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடலில் காயங்கள் ஆறுவது தாமதமாகும். அந்த இடத்தில் காயம் மறைந்து புதிய தோல் உருவாக நீண்ட நாட்கள் ஆகும்.
- தொடர் மூட்டு வலிகளால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் இதற்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் காரணம். மூட்டு வலி நிலையை அடைகிறீர்கள் எனில் பிரச்னை தீவிரமாகிறது என்று அர்த்தம். எனவே இதை கவனிக்காமல் விடாதீர்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US