பாதுகாப்பை பலப்படுத்த அரசின் நிதி உதவிகள் குறைப்பு: ஜேர்மன் வருங்கால தலைவர் யோசனை
ஜேர்மனியின் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என கூறியுள்ள ஜேர்மனியின் வருங்கால சேன்ஸலர் என கருதப்படும் அரசியல்வாதி, அதை எப்படிச் செய்வது என்ற தனது திட்டத்தையும் வெளியிட்டுள்ளார்.
நிதி உதவிகளைக் குறைத்து நாட்டுக்கு பாதுகாப்பு
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, தற்போதைய சேன்ஸலரான Social Democrats (SPD) கட்சியைச் சேர்ந்த ஓலாஃப் ஷோல்ஸும், அடுத்து சேன்ஸலராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும், Christian Democrats (CDU) கட்சியைச் சேர்ந்த, ஃப்ரெட்ரிக் மெர்ஸ் என்பவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது, ஜேர்மனியின் பாதுகாப்புச் செலவுக்காக, நாட்டின் GDP என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 2 சதவிகிதத்தை செலவிடவேண்டும் என ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.
மெர்ஸோ, 3 சதவிகிதத்தையாவது செலவிடவேண்டும் என்கிறார்.
அதற்காக, அரசு வழங்கிவரும் சில நிதி உதவிகளை குறைக்கவேண்டும் என்றும், அந்த நிதியை ராணுவத்தை பலப்படுத்த பயன்படுத்தலாம் என்றும் மெர்ஸ் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் மெர்ஸின் CDU கட்சிதான் முன்னிலை வகிக்கிறது.
CDU கட்சிக்கு 30 சதவிகித மக்கள் ஆதரவு இருக்கும் நிலையில், ஆளும் ஷோல்ஸின் SPD கட்சிக்கு 16 சதவிகித ஆதரவுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |