பள்ளி மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ்.., ஆசிரியர் மீது நடவடிக்கை
அரசு மகளிர் பள்ளியில் 12 -ம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு வளைகாப்பு?
தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளில் சிலர், சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று அழைப்பிதழை செல்போனில் தயார் செய்துள்ளனர்.
பின்னர், பள்ளியில் மேல் தளத்தில் மாணவிக்கு வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களையும் தயார் செய்துள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவியை அங்கு அழைத்துச் சென்று பேப்பர் மாலை அணிவித்து, சாப்பாடு வகைகள் வைத்து, வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, அரசு பள்ளியின் தலைமை ஆசியரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
மேலும், மாணவிகளின் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |