பிரித்தானிய ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி: 30 ஆண்டுகளில் முதல் முறை
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது பட்ஜெட் திட்டத்தை புதன்கிழமை அறிவிக்கும்போது ரயில் கட்டணங்களை முடக்குவதாகக் கூறியுள்ளார்.
இதுவே முதல் முறை
விலைவாசி உயர்வால் சிரமப்படும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ரீவ்ஸ் தனது பட்ஜெட்டில் வரிகளை உயர்த்துவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது,

ஆனால் ரயில்வேயை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, முடக்கப்பட்ட கட்டணங்கள் ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றே நம்பப்படுகிறது. மேலும், இந்த முடக்கம் ரயில் பயணச் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் ரயில் கட்டணங்கள் முடக்கப்பட்டது இதுவே முதல் முறை. மேலும், இந்த நடவடிக்கை பயணிகளின் சீசன் டிக்கெட்டுகளில் நூற்றுக்கணக்கான பவுண்டுகளை மிச்சப்படுத்தும்,

பயணிகளுக்கான செலவுகளை பெருமளவு குறைக்கும், மேலும் நாடு முழுவதும் உள்ள நகர மையங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்றே தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |