10 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 117 ரன்! முதல் சதமே ருத்ரதாண்டவம்..பாகிஸ்தானை பந்தாடிய தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியாக முதல் டி20 சதம் விளாசினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட சைம் அயூப்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது.
பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. ரிஸ்வான் 11 ஓட்டங்களில் வெளியேற, பாபர் அசாம் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட சைம் அயூப் 57 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்கள் விளாசினார்.
இர்பான் கான் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 206 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிக்கெல்ட்டன் (2), மேத்யூ ப்ரீட்ஸே (12) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹென்றிக்ஸ் ருத்ர தாண்டவம்
ஆனால் ரீஸா ஹென்றிக்ஸ் (Reeza Hendricks) ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஸ்சி வான் டெர் டுசென் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இவர்களின் அதிரடி மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவரில் 210 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
முதல் டி20 சதம் அடித்த ஹென்றிக்ஸ் 63 பந்துகளில் 10 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 117 ஓட்டங்கள் எடுத்தார். வான் டெர் டுசென் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |