பிரித்தானியாவில் அடுத்து வலதுசாரிகள் ஆட்சி... 400 ஆசனங்கள் வரை வெல்ல வாய்ப்பு
பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் இன்று முன்னெடுக்கப்பட்டால் 400 ஆசனங்கள் முன்னிலைப் பெற்று Reform UK கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
400 ஆசனங்களுடன்
ஏற்கனவே வெளியான ஆய்வறிக்கையின் அடிப்படையில் சர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் அரசாங்கத்தை விட நைகல் ஃபரேஜ் 15 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். மட்டுமின்றி, தற்போதைய சூழலில் 20 சதவீத வாக்காளர்கள் மட்டுமே லேபர் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் 35 சதவீத வாக்காளர்கள் Reform UK கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பொதுத்தேர்தல் இன்று நடத்தப்பட்டால் 400 ஆசனங்களுடன் ஃபரேஜ் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் லேபர் ஆட்சிக்கு வெளியான கருத்துக்கணிப்புகள் கடும் நெருக்கடியை அளிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, லேபர் அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை ஃப்ரேஜ் தீர்த்து வைப்பார் என 41 சதவீத மக்கள் நம்புகின்றனர். அதேவேளை 14 சதவீத மக்கள் மட்டுமே ஸ்டார்மர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
புலம்பெயர் நெருக்கடியை கன்சர்வேட்டிவ் கட்சி தீர்த்து வைக்கும் என 8 சதவீத மக்கள் மட்டுமே நம்புகின்றனர். புலம்பெயர் மக்களை கூட்டமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஃபரேஜ் பேசிவரும் நிலையிலேயே இந்தக் கருத்துக்கணிப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருப்தி அளிக்கவில்லை
ஃபரேஜ் முன்வைக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் என 40 சதவீத பிரித்தானியர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் தாம் ஆட்சிக்கு வந்ததும் 600,000 சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்துவேன் என பிரித்தானியர்களுக்கு ஃபரேஜ் உறுதி அளித்துள்ளார்.
இதனால் பல பில்லியன் பவுண்டுகள் சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் 37 சதவீத வாக்காளர்கள் ஃபரேஜ் அவரது கட்சியை வழிநடத்தும் விதத்தில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பிரதமர் ஸ்டார்மரின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 60 சதவீத வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |