இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்கள்: பயந்தது போலவே நடந்தது
இங்கிலாந்தில், நேற்று, அதாவது, மே மாதம் 1ஆம் திகதி, 1,641 கவுன்சில் இருக்கைகளுக்கான தேர்தல், நடைபெற்றது.
பயந்தது போலவே நடந்தது
இங்கிலாந்தின் 317 கவுன்சில்களில் 24 கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்றதுடன், ஆறு மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தலில் அதிகம் கவனம் ஈர்த்தார் Reform UK கட்சியின் தலைவரான நைஜல் (Nigel Farage).
நைஜல் கட்சிக்கு இந்த தேர்தல் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஆளும் லேபர் கட்சிக்கே கவலையை உருவாக்கியது.
ஏனென்றால், உங்கள் கவுன்சிகளை நடத்த நைஜல் கட்சி முட்டாள்களை நம்பவேண்டாம், அவர்களுக்கு தங்கள் வேலையையே ஒழுங்காகச் செய்யத் தெரியாது என லேபர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் விமர்சித்திருந்தார்!
ஆனால், லேபர் கட்சி பயந்ததுபோலவே நடந்துவிட்டது. ஆம், Runcorn தொகுதியில் நைஜலின் Reform UK கட்சி வெற்றி பெற்றுள்ளது.
விடயம் என்னவென்றால், வெறும் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சியின் வேட்பாளரான சாரா (Sarah Pochin) வெற்றி பெற்றுள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |