சுவிட்சர்லாந்தில் உச்சம் தொடும் எரிபொருள் விலை
சுவிட்சர்லாந்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே எரிபொருள் விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அக்டோபர் மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலையில் 3 cents அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமையில் இருந்து ஒரு லிற்றர் அன்லீடட் 95 விலை சராசரியாக 1.83 பிராங்குகள் என விற்கப்பட்டது.
1.85 பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிற்றர் டீசல் விலை தற்போது 1.88 பிராங்குகள் என அதிகரித்துள்ளது. சூரிச் பகுதிகளில் பெட்ரோல் விலை அதிகரித்தே காணப்படுவதாகவும், ஆனால் புறநகர் பகுதிகளில் பொதுவாகவே மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Wollishofen Zurich-ல் ஒரு லிற்றர் பெட்ரோல் விலை 1.85 பிராங்குகள் என விற்கப்படும் நிலையில் Langgasse (St. Gallen)ல் 1.24 பிராங்குகளுக்கு விற்கப்படுகிறது. Lucerne( 1.79 பிராங்குகள்), Staldenhof-ல் 1.77 பிராங்குகளுக்கு ஒரு லிற்றர் பெட்ரோல் விற்பனையாகிறது.
மேலும், ரைன் நதியில் தண்ணீர் அளவு குறைந்ததும் விலை உயர்வுக்கு முதன்மை காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் சரக்கு கப்பல்களில் 40 சதவீத சரக்குகள் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மட்டுமின்றி சரக்கு கட்டணம் ஒரு டன்னுக்கு 24 பிராங்குகளில் இருந்து 54 பிராங்குகளாக அதிகரித்துள்ளதும் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.