ஜேர்மனியில் பேருந்தின் அடியிலிருந்து சாலையில் விழுந்த அகதி: அதிர்ச்சியடைந்த பெண்
ஜேர்மனியில், கார் ஒன்றை செலுத்திக்கொண்டிருந்த ஒரு பெண், திடீரென தன் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் அடியிலிருந்து ஒருவர் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேருந்தின் அடியிலிருந்து சாலையில் விழுந்த நபர்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார் ஒரு பெண். அவருக்கு முன்னால் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தின் சாரதி திடீரென பலமாக ஹாரனை ஒலிக்கச் செய்ய, உஷாரானார் அவர். அப்போதுதான் திடீரென பேருந்தின் கீழிருந்து ஒருவர் சாலையில் விழுந்துள்ளதைக் கவனித்த அவர், அந்த நபர் மீது மோதாமல் கவனமாக காரை நிறுத்தியுள்ளார்.
பேருந்து நிற்கவும், பேருந்தின் கீழிருந்து மற்றொரு நபரும் வெளியே வந்துள்ளார். பொலிசார் அவர்களை விசாரிக்க, அவர்கள் இருவரும் மொராக்கோ நாட்டவர்கள் என்பதும் புகலிடக்கோரிக்கையாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 26 வயதுடைய அவர்கள் இருவரையும் புலம்பெயர்தல் அதிகாரிகளிடம் பொலிசார் ஒப்படைத்துள்ளார்கள்.
அவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் பேருந்துக்கு அடியில் தொங்கிக்கொண்டு பயணித்தார்கள் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |