4 வயதில் அகதியாக வந்த சிறுமி! இன்று பிரித்தானியாவின் அழகு ராணி
சிறு படகொன்றில் பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த பெண் ஒருவர், இன்று அவமானங்களையும் தற்கொலை எண்ணங்களையும் வென்று சாதித்துக் காட்டியுள்ளார்.
சந்தித்த அவமானங்கள்
Kosovo என்னும் நாட்டில் பிறந்த பிரான்சிஸ்கா (Franceska Murati, 27) என்னும் இளம்பெண்ணுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவரது குடும்பம் போருக்குத் தப்பி சிறு படகொன்றில் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளது.
பிரான்சிஸ்காவுக்கு 12 வயதாகும்போது, அவரை வம்புக்கிழுக்கத் துவங்கியுள்ளனர் சக மாணவ மாணவிகள். இது பல ஆண்டுகளுக்கு தொடர்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, யாராவது திடீரென பின்னாலிருந்து பிரான்சிஸ்காவின் முடியை வெட்டி விடுவார்களாம்.
மதிய உணவு வேளையின்போது, உணவைத்தூக்கி பிரான்சிஸ்காவின் முகத்தில் வீசுவார்களாம். பயணம் செய்வதற்கான அட்டையை திருடிவிடுவார்களாம். அதனால், பிரான்சிஸ்கா பல நாட்கள் நடந்தே வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுமாம்.
இன்று அழகு ராணி
அப்படி அவமானங்களை சந்தித்தபோது, தற்கொலை செய்துகொள்ளலாமா என தோன்றுமாம் பிரான்சிஸ்காவுக்கு. ஆனால், அதையெல்லாம் தாண்டி, படிப்பை முடித்ததும், சுய தொழில் செய்யும் ஒரு தொழிலதிபராகியிருக்கிறார் பிரான்சிஸ்கா.
Franceska Murati / SWNS
தன்னை அவமதித்த இடத்திலேயே சாதித்துக்காட்ட முடிவு செய்த பிரான்சிஸ்கா, மிஸ் லண்டன் போட்டியில் பங்கேற்றுள்ளார், வெற்றியும் பெற்றுவிட்டார்.
அடுத்தது, மிஸ் கிரேட் பிரிட்டன் போட்டியில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார் பிரான்சிஸ்கா. என்னை வம்புக்கிழுத்து அவமானப்படுத்தியவர்கள் முன்னால் இன்று சாதித்துக்காட்டியுள்ளேன் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |