சிறப்பு அகதிகள் நிலை நீட்டிப்பு : சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு
உக்ரைன் அகதிகளுக்கான சிறப்பு அகதிகள் நிலையை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக, சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் அகதிகளுக்காக சிறப்பு அகதிகள் நிலை
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 12ஆம் திகதி, உக்ரைன் ரஷ்யப் போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்த உக்ரைன் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ’S status’ என்னும் சிறப்பு அகதிகள் நிலையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது சுவிட்சர்லாந்து அரசு.
ஆனால், அது உக்ரைன் நாட்டவர்கள் நீண்ட காலம் சுவிட்சர்லாந்தில் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல.
அகதிகளைத் திருப்பி அனுப்ப திட்டம்
உலக நாடுகள் பல, ரஷ்யா உட்பட, போர் விரைவில் முடிந்துவிடும் என்றே நம்பின. ஆனால், இப்போதிருக்கும் சுழலில், உக்ரைன் போர் எப்போது முடியும் என்பதை யாராலும் கணிக்கமுடியாத ஒரு நிலைமையே உள்ளது.
ஆகவே, ’S status’ என்னும் சிறப்பு அகதிகள் நிலையை அமுல்படுத்தியதை, திரும்பப் பெறுவதற்கு சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செப்டம்பரில் செய்திகள் வெளியாகின.
சிறப்பு அகதிகள் நிலை நீட்டிப்பு
இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கான சிறப்பு அகதிகள் நிலையை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக, சுவிட்சர்லாந்து அரசு தற்போது அறிவித்துள்ளது.
உக்ரைன் அகதிகளுக்கான சிறப்பு அகதிகள் நிலையை, குறைந்தது 2025ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வரை நீக்கப்போவதில்லை, என சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
Lieber Institute - West Point
சிறப்பு அகதிகள் நிலை பெற்ற உக்ரைன் நாட்டவர்கள், தங்கள் நாட்டுக்குத் திரும்புவது பாதுகாப்பானது என்ற நிலை ஏற்படும் வரை சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கலாம், பணியும் செய்யலாம்.
தற்போது, சுவிட்சர்லாந்தில் சுமார் 66,000 உக்ரைன் நாட்டவர்கள் ’S status’ என்னும் சிறப்பு நிலையை அனுபவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |