தங்க இடம் இல்லாததால் சுவிட்சர்லாந்தில் பரிதாப நிலையில் அகதிகள்
Refugees sleeping in Vaud bunkers: தங்க இடம் இல்லாததால், வாட் மாகாணத்தில் பங்கர்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் அகதிகள்.
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், அரசு சார்பில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் அமைப்பு, The Vaud Establishment for Migrants (EVAM) என்னும் அமைப்பு.
ஆனால், அகதிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் நிரம்பிவிட்டதால், EVAM அமைப்பு, அகதிகளை பங்கர்களில் தங்கவைத்துள்ளது.
பரிதாப நிலையில் அகதிகள்
வாட் மாகாணத்தில், உக்ரைன் நாட்டவர்கள் உட்பட சுமார் 100 அகதிகள் பங்கர்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அந்த பங்கர்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள், காலை நேரம் ஆனதும் வெளியேறிவிடவேண்டும். மாலையில்தான் அவர்கள் மீண்டும் பங்கர்களுக்குத் திரும்பவேண்டும்.
ஜன்னல்கள் எதுவும் இல்லாததால், வெளிச்சமோ, சுத்தமான காற்றோ இல்லாமல், சிறிய இடத்தில் பிரைவசி எதுவும் இல்லாமல், பலர் தூங்கும் நிலை அந்த பங்கர்களில் காணப்படுகிறது.
அதனால், பலருக்கு உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்படுவதாக அந்த பங்கர்களில் தங்குபவர்கள் கூறுகிறார்கள்.
விடயம் என்னவென்றால், அடுத்த ஆண்டும் அகதிகளைத் தங்கவைக்கவேண்டியுள்ள நிலையில், மேலும் சில பங்கர்களைத் திறக்க EVAM அமைப்பு திட்டமிட்டு வருகிறது!