கனடாவில் உணவு வங்கிகளை நாடும் அகதிகள்: விலைவாசி உயர்வால் எடுக்கும் முடிவு
கனடா, உக்ரைன் அகதிகள் ஏராளமானோருக்கு புகலிடம் அளித்துள்ளது. ஆனால், கனேடியர்களே விலைவாசி உயர்வால் சற்று தடுமாறிவரும் நிலையில், புதிதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள்?
உணவு வங்கிகளை நாடும் அகதிகள்
ஆக, விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உணவு வங்கிகளை நாடிவருகிறார்கள் உக்ரைன் அகதிகள்.
கனடாவின் பெடரல் அரசு, புதிதாக வந்துள்ள உக்ரைன் அகதிகளின் உடனடித் தேவைகளுக்காக, பெரியவர்களுக்கு ஆளுக்கு 3,000 டொலர்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 1,500 டொலர்களும் வழங்குகிறது.
ஆனால், அரசு சிறிது நிதி உதவி செய்தாலும், ஒரு மாதமாக வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருப்பதாகத் தெரிவிக்கிறார் இந்த அகதிகளுக்கு உதவும் ஒருவர்.
Oleksandr மற்றும் Halyna Sirak என்னும் ஓய்வு பெற்ற தம்பதியருக்கு வேலைக்கு செல்ல இயலாத நிலைமை. ஆகவே, அவர்களுக்கு உணவு வங்கிகள்தான் ஒரே உதவி.
வேலை செய்ய முடிந்தவர்கள் பலருக்கு மொழிப் பிரச்சினையால் வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஆக, உணவு வங்கிகளை நாடுவதைத் தவிர இந்த அகதிகள் பலருக்கு வேறு வழியில்லை.