Refurbished தொலைபேசிகளின் கேள்வி அதிகரித்தே வருகிறது!
Refurbished தொலைபேசிகள் அனைத்தும் தற்போதைய உலகத்தில் வளர்ந்து வரும் ஒரு சந்தையாக காணப்படுகின்றது.
முதலில் Refurbished தொலைபேசிகள் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Refurbished தொலைபேசிகள்
Refurbished தொலைபேசிகள் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு வெவ்வேறு பயனர்கள் பாவித்து மீண்டும் அதை திருப்பி அனுப்பப்பட்டால், அது இரண்டாவது கை பொருட்கள் எனக் கூறப்படும். ஆதுவே Refurbished தொலைப்பேசிகள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு பெரும்பாலானோரால் திருப்பிக் கொடுக்கப்படும் தொலைபேசிகள் கடந்த ஆண்டு 283 மில்லியனாக இருந்தது. ஆனால் 2026 ஆண்டு வரும் பொழுது அந்த எண்ணிக்கையானது 415 மில்லியனாக அதிகரிக்கும் என்று ஆராய்சியின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகில் முன்னணி தொலைபேசி நிறுவனமாக விளங்கும் Apple மற்றும் Samsung நிறுவனங்களும் சொந்தமாக Refurbished கடைகளை அமைந்துள்ளது.
தொலைபேசியின் பேட்டரியின் நிலை, மற்ற துணை சாதனங்களின் நிலை ஆகியவைகளை கவனம் செலுத்து புதுப்பித்து வருகின்றனர்.
பயனர்களின் கருத்து
Refurbished தொலைபேசிகளை பயன்படுத்தும் பயனர்கள் இது பற்றி நல்லக்கருத்துகளை கொடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.