சுற்றுலாப்பயணியை சுற்றி வளைத்த ஆயுதம் தாங்கிய சுவிஸ் பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டவர் ஒருவரை, ஆயுதம் தாங்கிய பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.
Vladislav Klyushin என்பவர், மார்ச் மாதம் தனது குடும்பத்துடன் தனது சொந்த ஜெட் விமானத்தில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்தார்.
விமானம் தரையைத் தொட்டதும், தயாராக இருந்த ஆயுதம் தாங்கிய பொலிசார் Klyushinஐ சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த Klyushin யார் என்றால், அவர் M13 என்னும் நிறுவனத்தின் உரிமையாளர். ஊடகங்களை மேற்பார்வையிடுதல் மற்றும் சைபர் பாதுகாப்பு சேவைகளில் அவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் இணையதளத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகமும் அரசும் தங்கள் வாடிக்கையாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த Klyushin மீது, அமெரிக்க நிறுவனங்களின் தரவுகளைத் திருடுவதற்காக இணையதளங்களை ஹேக் செய்ததற்காக, வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகவே, அமெரிக்காவின் கோரிக்கையின்பேரில் அவரை சுவிட்சர்லாந்து கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.