லண்டன் சாலையில் சுத்தியல் வைத்து நால்வரை காயப்படுத்தியதோடு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது
லண்டனில் சுத்தியலால் சிலரை அடித்து காயப்படுத்தியும், இரண்டு பெண்கள் மீது பாலியல் தாக்குதலும் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஜெண்ட் தெருவில் தான் இந்த சம்பவங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது.
இது தொடர்பாக மோர்டிசா அஹமதி (38) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர், அவருக்கு நிரந்தர முகவரி இல்லை என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அஹமதி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். பொலிசார் கூறுகையில், இரண்டு இளம்பெண்களை அஹமதி சுத்தியலை கொண்டு தாக்கியிருக்கிறார். இதோடு இரண்டு பெண்கள் மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
மேலும் அங்குள்ள மதுபான பப்புக்கு சென்று 50கள் மற்றும் 40களில் உள்ள இரண்டு ஆண்களை தாக்கியிருக்கிறார்.
காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சம்பவ நாளில் இரவு 11 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.