அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழை- வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் கே.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, 24 மணிநேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.
மேலும் குறித்து தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.