முதல் சதத்திலேயே உலக சாதனை படைத்த வீரர்!
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வீரர் ரெஜிஸ் சகப்வா அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஹராரேவில் வங்கதேசம்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மஹ்முதுல்லா 80 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிக்கந்தர் ரசா 117 ஓட்டங்களும், ரெஜிஸ் சகப்வா 102 ஓட்டங்களும் விளாசினர்.
55வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ரெஜிஸ் சகப்வாவிற்கு இதுதான் முதல் சதம் ஆகும். மேலும், அவர் 73 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார்.
MILESTONE: Regis Chakabva now holds the ?? record for the fastest 1⃣0⃣0⃣ ODI runs, with his century against Bangladesh coming off 73 balls. Congrats, Regis! ? pic.twitter.com/uj3qmJoD1q
— Zimbabwe Cricket (@ZimCricketv) August 8, 2022
முன்னதாக 2015ஆம் ஆண்டு பிரண்டன் டெய்லர் 79 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை ரெஜிஸ் சகப்வா முறியடித்துள்ளார். அவர் 75 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் விளாசினார்.