ஒவ்வொருவருக்கும் நிபந்தனையற்ற அடிப்படை வருமானம்: சுவிட்சர்லாந்தில் புதிய முயற்சி
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரத்தில் புதிய முயற்சியாக தெரிவு செய்யப்படும் 300 குடிமக்களுக் நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, வாய்ப்பு தேவைப்படுவோர் தங்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெர்ன் நகரத்தின் 9 அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள இந்த கோரிக்கையானது நவம்பர் 11ம் திகதி நகர சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கவும் முடிவாகியுள்ளது.
இதனையடுத்து பரிச்சார்த்த முயற்சியாக தெரிவு செய்யப்படும் 300 குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
பெர்ன் நகர மக்கள் அனைவரும் இந்த புதிய முயற்சிக்காக பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக 9 மில்லியன் பிராங்குகள் செலவிடப்படும் என்றே கூறப்படுகிறது.
2016ல் பெடரல் நிர்வாகத்தின் கீழில் இதுபோன்ற ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு, பொதுமக்களிடம் வாக்களிக்க கோரப்பட்டது. ஆனால் 75 சதவீத மக்கள் அவ்வாறான ஒரு முயற்சி தேவையில்லை என நிராகரித்தனர்.
இருப்பினும், சூரிச் நகரில் அவ்வாறான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களில் சிலர் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்க, அந்த முயற்சி கைவிடப்பட்டது.