விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்! இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய அனுமதி

Sivaraj
in கிரிக்கெட்Report this article
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரெஹான் அகமதுவிற்கு மீண்டும் விசா வழங்கப்பட்டு, இந்தியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
சுழற்பந்து வீச்சாளர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, ராஜ்கோட்டில் 15ஆம் திகதி தொடங்க உள்ள டெஸ்டில் விளையாட இருக்கிறது.
இதற்காக இங்கிலாந்து அணியினர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தனர். அப்போது விமான நிலையத்தில் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது விசா சிக்கலை எதிர்கொண்டார்.
Getty
ஒற்றை நுழைவு விசாவை மட்டுமே வைத்திருந்த அவரிடம் சரியான ஆவணங்களும் இல்லை என தெரிய வந்தது. அவர் அபுதாபியில் இடைத்தொடருக்கு பின் இந்தியாவுக்கு செல்லாத விசாவுடன் திரும்பியிருக்கிறார்.
அவசர விசா
இதனால் விமான நிலையத்தில் அவர் நிறுத்தி வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இரண்டு நாள் அவசர விசா வழங்கப்பட்டது.
அவரின் தாமதத்தைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் விசா சிக்கலுக்கு இந்த தீர்வை கொண்டுவந்தனர்.
இங்கிலாந்து நம்பிக்கையுடன் அடுத்த 24 மணி நேரத்தில் பிரச்சனை முழுமையாக வரிசைப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
@Getty Images
அனுமதி
இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், அடுத்த இரண்டு நாட்களில் விசாவை மீண்டும் செயல்படுத்த இங்கிலாந்து அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெஹான் மற்ற அணி வீரர்களுடன் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் தோன்றுவார் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |