மெஸ்சி, எம்பாப்பேவை மீறி கடைசி நொடிகளில் கோல் அடித்த வீரர்! வெற்றியை இழந்ததால் அதிர்ச்சியில் உறைந்த PSG
பிரான்சில் நடந்த PSG மற்றும் Reims அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
நெய்மர் கோல்
பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் லீக் 1 தொடர் கால்பந்து போட்டியில் PSG - Reims அணிகள் மோதின. முதல் பாதியில் கோல்கள் விழாததால் ஆட்டம் சமனில் இருந்தது.
அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 59வது நிமிடத்தில் PSG -யின் மார்கோ வெரட்டி விதியை மீறி செயல்பட்டதால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
மறுமுனையில் Reims அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க போராடினர். ஆனால் மெஸ்சி, எம்பப்பே மற்றும் நெய்மரின் மும்முனை தாக்குதலால் அந்த அணியின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
@REUTERS/Christian Hartmann
ஆட்டத்தின் 84வது நிமிடத்தில், கோல் அடித்திருந்த நெய்மருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது Reims அணி வீரர்கள் புயல் வேகத்தில் செயல்பட்டனர்.
அதிர்ச்சி கொடுத்த வீரர்
ஆட்டத்தின் நொடிகளில் லாவகமாக PSG-யிடம் இருந்து பந்தை பறித்துக் கொண்ட பலோகன், மின்னல் வேகத்தில் ஓடி அசாத்தியமாக கோல் அடித்தார்.
கடைசி 30 நொடிகளுக்கு முன்பு வரை எப்படியும் PSG தான் வெற்றி பெறும் என்று நினைத்த ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.
@AFP
இறுதியில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப்பட்டியில் PSG முதலிடத்திலும், Reims 11வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
REUTERS/Christian Hartmann