இரண்டு முறை நிராகரித்த கூகிள் நிறுவனம்... சொந்தமாக தொழில் தொடங்கியவர் இன்று ரூ 11,600 கோடிக்கு அதிபதி
பட்டப்படிப்பை முடித்து வேலை தேடிய பின்னி பன்சால், கூகிள் நிறுவனத்தால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டார். நண்பருடன் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கிய அவர் இன்று ரூ 11,600 கோடிக்கு அதிபதி.
கூகிள் நிறுவனத்தில் வேலை
ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்யும் பொருட்டு தொடங்கப்பட்டது தான் Flipkart. ஆனால் தற்போது அந்த நிறுவனம் விற்காத பொருட்கள் இல்லை. கடந்த 2007ல் தனது நண்பர் சச்சின் பன்சால் என்பவருடன் இணைந்து பின்னி பன்சால் என்பவர் Flipkart நிறுவனத்தை தொடங்கினார்.
கூகிள் நிறுவனத்தில் வேலை என்ற கனவுடன் இரண்டு முறை முயன்றும் பின்னி பன்சால் நிராகரிக்கப்பட்டார். இதனையடுத்தே தங்கள் இருவரின் சேமிப்பு தொகையான ரூ 271,000 பணத்தில் ஒன்லைன் புத்தக விற்பனை நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
தற்போது Flipkart நிறுவனத்தின் மதிப்பு என்பது 37.6 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய பணமதிப்பில் ரூ 312,537 கோடி என்றே தெரியவந்துள்ளது. வெறும் புத்தக விற்பனை நிறுவனமாக துவங்கப்பட்ட Flipkart, பின்னர் இந்திய சந்தையில் Amazon நிறுவனத்திற்கு கடும் போட்டியாளராக உருவெடுத்தது.
இந்த நிலையில் கடந்த 2018ல் வால்மார்ட் நிறுவனம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Flipkart நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை கைப்பற்றியது. இது இணைய வர்த்தக உலகில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக அப்போது கருதப்பட்டது.
பல கோடி சொத்து மதிப்பு
நண்பர்கள் இருவரும் Flipkart நிறுவனத்தில் இருந்து வெளியேறினாலும், இருவரும் பல கோடி சொத்து மதிப்பை ஈட்டியுள்ளனர். Flipkart நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பின்னர் தம்மிடம் இருந்த எஞ்சிய பங்குகளையும் Walmart நிறுவனத்திற்கே பின்னி பன்சால் விற்றுள்ளார்.
இதனூடாக சுமார் 650 மில்லியன் டொலர்களை பின்னி பன்சால் சொந்தமாக்கினார். அதாவது சுமார் ரூ 5402 கோடி. தற்போது பின்னி பன்சாலின் மொத்த சொத்துமதிப்பு என்பது ரூ 11,637 கோடி என்றே கூறப்படுகிறது.
Flipkart நிறுவனத்தில் தமக்கு சொந்தமாக இருந்த பங்குகளில் ஒருபகுதியை சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீன நிறுவனமான Tencent-க்கு பின்னி பன்சால் விற்பனை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |