எம்.எஸ்.தோனிக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன சம்மந்தம்? தீயாக பரவும் செய்தி
நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் தோனியை தொடர்புபடுத்தி சில தகவல்கள் பரவி வருகிறது.
பட்ஜெட் தாக்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7 -வது பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல, மாத சம்பளம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ.50,000 -ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பெறுவோருக்கு 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெறுவோருக்கு 10 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பெறுவோருக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பெறுவோருக்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
இதில் கவலை அளிக்கும் விடயம் என்னவென்றால் தனிநபர் வாரியானது 2022 -2023 -ம் ஆண்டில் கார்ப்பரேட் வரியை முந்தியுள்ளது. இதில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வரிகளில் அதிக பங்களிப்பு செய்கிறார்கள்.
தோனிக்கு என்ன தொடர்பு?
இந்நிலையில், கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி, விவசாயம் செய்வது தொடர்பாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் தான் இந்த விவாதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் விவசாயத்திற்கு வரி இல்லை. அது கோடிக்கணக்கில் வருமானம் இருந்தாலும் அதற்கு வரி இல்லை.
அந்தவகையில் தோனி விவசாயத்தில் முதலீடு செய்துள்ளார். தனது பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார். விவசாயத்திற்கு பூஜ்ஜிய வரி என்பதால் அவர் கூடுதல் மானியம் பெறுகிறார்.
அதாவது தோனியிடம் தொலைநோக்கு பார்வை இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் விவசாயத்தை தோனி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |