மன்னர் சார்லஸ் குடும்பத்துக்கும் ஜேர்மனிக்கும் உள்ள நீண்ட கால தொடர்பு: ஒரு சுவாரஸ்ய தகவல்
மன்னர் சார்லசுக்கும் ஜேர்மனிக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய உறவு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், 1714ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, இங்கிலாந்தின் ராணியான ஆன் மரணமடைய, ஜேர்மன் பேரரசரான ஜார்ஜ் லூயிஸ் ஹானோவர் என்பவர் பிரித்தானியாவின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
பிரித்தானியாவின் அரியாசனத்தில் அமர்ந்த முதல் ஜேர்மானியர் அவர்தான். மன்னராக அறிவிக்கப்பட்டும், இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் இங்கிலாந்து மண்ணில் கால் பதித்தார் அவர்.
1714ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் பிரித்தானிய மன்னராக முடிசூட்டப்பட்டார் அவர்.
மன்னர் சார்லசுக்கும் ஜேர்மனிக்கும் உள்ள தொடர்பு
ஆக, பிரித்தானிய மன்னர்கள் பலர் ஜேர்மானியர்களாக இருக்க, அல்லது ஜேர்மானியர்களை மணம் முடிக்க, ஜேர்மானிய இரத்தம் பிரித்தானிய மன்னர்களுடைய குடும்பத்தில் இருந்துகொண்டே வந்துள்ளது.
மறைந்த எலிசபெத் மகாராணியரின் தாய் பிரித்தானியர். ஆனால், அவரது கணவரான இளவரசர் பிலிப்பின் பெற்றோரோ அதிக அளவில் ஜேர்மன் மூதாதையர்களைக் கொண்டவர்.
REUTERS
சிறப்பாக ஜேர்மன் மொழியும் பேசக்கூடியவர் பிலிப். 1947ஆம் ஆண்டுதான் அவர் பிரித்தானியக் குடிமகன் ஆனார். எலிசபெத்தை திருமணம் செய்வதற்கு சற்று முன் தான் தனது ஜேர்மன் பட்டத்தை துறந்து மௌண்ட்பேட்டன் என்னும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டிருக்கிறார்.
ஆக, இளவரசர் பிலிப், மகாராணி எலிசபெத் தம்பதியரின் மூத்த மகனான மன்னர் சார்லசுடைய மூதாதையர்களிலும் பாதிபேர் ஜேர்மானியர்கள்தான். இன்னொரு விடயம் என்னவென்றால், இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுடைய மூதாதையர்களில் சிலர் ஜேர்மானியர்களாம்.
எல்லாவற்றையும்விட சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், பிரித்தானிய அரியணையேறும் வரிசையில் கடைசியாக இருப்பவர் Karin Vogel என்னும் ஜேர்மானிய பெண். அவர் ஜேர்மனியிலுள்ள Rostock என்னுமிடத்தில் Hospital therapistஆக பணியாற்றிவருகிறார்.
இந்த Karin Vogel யார் தெரியுமா?
அவர், பிரித்தானியாவின் முதல் ஜேர்மன் மன்னரான முதலாம் ஜார்ஜின் தாயாகிய Sophia of Hanoverஇன் பரம்பரையில் வந்தவர்!
ஆக, பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் நீண்ட கால உறவு இருந்துள்ளது, இன்னமும் அது நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகிவிட்டது.