இணையத்தில் லீக்கானது விவோ 5ஜி மாடலில் வெளியீட்டு விவரம்!
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி புது விவோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.