அது உண்மைக்கு புறம்பானது... ரூ 2.6 லட்சம் கோடி விவகாரத்தில் முகேஷ் அம்பானி பதிலடி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய அரசாங்கம் 30 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளதுடன், அது உண்மைக்கு புறம்பானது என பதிலளித்துள்ளது.
பொறுப்பற்றது
கேஜி-டி6 தொகுதி தொடர்பாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட உண்மையான கோரிக்கை 247 மில்லியன் டொலர் என்றும், இது தங்களின் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், 30 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளதாக வெளியான தகவல் பொருத்தமற்றது மற்றும் பொறுப்பற்றது என அறிக்கை ஒன்றில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன, மேலும் அவை நாட்டின் சட்டங்களின்படி அதன் நீதித்துறை அமைப்பால் தீர்மானிக்கப்படும்; அந்த நீதித்துறை அமைப்பின் மீது ரிலையன்ஸ் நிருவனம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
மட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், தனது பங்குதாரரான பிபி நிறுவனத்துடன் இணைந்து, எல்லா நேரங்களிலும் தனது ஒப்பந்த மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றியுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் உண்மைகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு நாங்கள் கடும் ஆட்சேபத்தைத் தெரிவிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தவறாக நிர்வகித்தல்
இந்த வழக்கானது, கிருஷ்ணா கோதாவரி படுகையில் உள்ள கேஜி-டி6 எரிவாயு தொகுதி தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையே உள்ள ஒன்றாகும்.
2016 முதல் நீடித்து வரும் இந்த வழக்கில், தவறாக நிர்வகித்தல் மற்றும் திட்டமிடப்பட்ட கிணறுகளைத் தோண்டத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நடுவர் மன்றம் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தத் தீர்ப்பை இந்திய நீதிமன்றங்களில் எதிர்த்து வழக்குத் தொடரலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |