சிங்கப்பூரை விட 3 மடங்கு பாரிய அளவில் சோலார் பூங்காவை உருவாக்கிவரும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பாரிய சோலார் பூங்காவை உருவாக்கி வருகிறது.
குஜராத்தின் கச் (Kutch) பகுதியில் அமைக்கப்படும் இந்த பூங்கா, சிங்கப்பூரை விட 3 மடங்கு பெரியதாகும்.
இந்த திட்டம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள், பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் மற்றும் SAF எரிபொருள் ஆகியவற்றை தயாரிக்க தேவையான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
இந்த சோலார் பூங்கா எதிர்காலத்தில் இந்தியாவின் மொத்த மின்சார தேவையின் 10 சதவீதம் வரை பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மொத்த திறன் குறித்து அவர் குறிப்பிடவில்லை. அனால், தொழில்நுட்ப நிபுணர்கள் இதன் திறன் குறைந்தது 10 ஜிக்வாட்டாக (GW) இருக்குமென மதிப்பீடு செய்துள்ளனர்.
பசுமை மின்சாரம் 24 மணிநேரமும் கிடைக்க, ரிலையன்ஸ் நிறுவனம் Battery Energy Storage Sysytems (BESS)அமைக்கிறது.
இதன்மூலம், தினமும் 55 மெகாவாட் சோலார் மாட்யூல்கள் மற்றும் 150 MWh பேட்டரி கன்டெய்னர்கள் நிறுவப்படும் என ஆனந்த் அம்பானி கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் 2032-க்குள் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் இந்தியாவை உலகளாவிய பசுமை எரிபொருள் மையமாக மற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் National Green Hydrogen Mission மற்றும் PLI திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.50 பில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2026-27 நிதியாண்டில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |