ரிலையன்ஸ் நிறுவனங்களில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் எந்த பொறுப்புகளில் உள்ளனர்... விரிவான தகவல்
மறைந்த திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 1985ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என பெயர் மாற்றம் பெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின்னர், ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் குழுமம் என்ற நிறுவனத்தை அவரது சகோதரர் அனில் அம்பானியும் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது 114 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வருகிறது.
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் நிறுவனராக உள்ளார். மட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
முகேஷ் - நீதா தம்பதியின் ஒரே மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார். மேலும், ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆகியவற்றின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்
ஆகாஷ் அம்பானி கடந்த 2022 முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது சகோதரர் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் சோலார் எனர்ஜி லிமிடெட், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார்.
அத்துடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார்.
இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
அனில் அம்பானியின் மகனான ஜெய் அம்பானி ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குனர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் இயக்குனராகவும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |