ரஷ்ய எண்ணெய் விவகாரம்... கடும் நெருக்கடியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
இரண்டு முக்கிய ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீதான அமெரிக்காவின் புதிய தடைகளுக்கு இணங்க, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியைக் கடுமையாகக் குறைக்கத் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு 1.7 மில்லியன்
இதனால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு பெரிய தடை ஒன்று நீங்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறுகின்றனர். மட்டுமின்றி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி காரணமாக ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போரை அடுத்து நாளுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் என கடந்த 9 மாதங்களாக ரஷ்ய மலிவு விலை எண்ணெய் இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்டது.
தற்போது ரஷ்யாவின் Lukoil மற்றும் Rosneft ஆகிய மிகப்பெரிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தியாவில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் முதலிடத்தில் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இருந்தது.
தற்போது அமெரிக்க தடைகளை அடுத்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அல்லது நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, Rosneft நிறுவனத்துடன் ரிலையன்ஸ் முன்னெடுத்டுள்ள மிகப்பெரிய நீண்ட கால ஒப்பந்தங்களையும் நிறுத்த முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடும் நெருக்கடி
இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இருப்பதாகவும் ரிலையன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா வாங்கிய ரஷ்ய எண்ணெயில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு Lukoil மற்றும் Rosneft ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து வழங்கியுள்ளது.
Rosneft நிறுவனத்திடம் இருந்து நாளுக்கு 500,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ரிலையன்ஸ் இறக்குமதி செய்துள்ளது. மட்டுமின்றி, இடைத்தரகர்களிடமிருந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் மலிவு விலைக்கு ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது.

சமீப நாட்களில் மத்திய கிழக்கு மற்றும் பிரேசில் நாட்டில் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவால் ரிலையன்ஸ் உட்பட குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |