பண்டிகை காலம்... ரூ 15,000 கோடியை மொத்தமாக அள்ளிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த வாரம் பண்டிகைக் காலத்தில், பங்குச் சந்தையில் அதன் பங்குகள் ஏற்றம் அடைந்த நிலையில் ரூ.15,393.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என அறியப்படுகிறார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 105.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அவரது ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் மற்றும் பிறவற்றில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும் ரிலையன்ஸ் உள்ளது. கடந்த வாரம் பண்டிகைக் காலத்தில், பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் ஏற்றம் அடைந்த நிலையில் ரூ.15,393.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளதுடன், சந்தை மதிப்பும் ரூ 1812120.05 கோடி என அதிகரித்துள்ளது.
490 மில்லியன் சந்தாதாரர்கள்
கடந்த 2023ல் முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளும் ரிலையன்ஸ் நிறுவன நிர்வாகக் குழுவில் சேர்ந்தனர். ரிலையன்ஸின் டெலிகாம் மற்றும் பிராட்பேண்ட் சேவையான ஜியோவில் சுமார் 490 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமின்றி, கடந்த வாரத்தில் ICICI, SBI, ITC, LIC மற்றும் Hindustan Unilever ஆகிய நிறுவனங்களும் ஆதாயம் அடைந்துள்ளன.
மேலும், டாப் 10 மதிப்பு மிக்க நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ 107,366.05 கோடி என அதிகரித்துள்ளது. இதில் ICICI, SBI வங்கிகள் மிக அதிகமாக ஆதாயமடைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |