கடனில் இருந்து மீண்டெழும் ரிலையன்ஸ் நிறுவனங்கள்... அனில் அம்பானியின் அதிர்ஷ்டத்தை மாற்றுவது யார்?
கடந்த சில ஆண்டுகளாக கடனில் தத்தளித்து வந்த அனில் அம்பானி, தொழில் ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்ததுடன், பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தையும் இழந்தார்.
கடன் இல்லாத நிலை
கடந்த 2008ல் உலகிலேயே 6வது பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தில் இருந்தார். ஆனால் தற்போது, அந்த பழைய நாட்களுக்கு அனில் அம்பானி திரும்புகிறார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடன் இல்லாத நிலையை அடைந்துள்ளது, ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் அதன் கடனை 87 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.
அத்துடன் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுகின்றன. ஆனால் இந்த மாற்றங்களுக்கு காரணம் யார்? அனில் அம்பானியின் அதிர்ஷ்டத்தை மாற்றுவது யார்?
அனில் அம்பானியின் இரு நிறுவனங்கள் சமீப நாட்களில் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
முக்கிய பொறுப்புக்கு
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகள் உயர்வுக்குக் காரணம், அந்த நிறுவனம் தொடர்பான நல்ல செய்திதான் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தாமோதர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடனான தகராறில், ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு ஆதரவாக ரூ.780 கோடி மதிப்பிலான நடுவர் தீர்ப்பை கல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அத்துடன் அனில் அம்பானியின் இரு மகன்களும் முக்கிய பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு மாற்றங்கள் நிகழத்தொடங்கின. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழும நிறுவனம் பூடானில் 1,270 மெகாவாட் சூரிய மற்றும் நீர்மின் திட்டங்களை அமைப்பதாக அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |