நிகர லாபத்தில் ரூ 16,563 கோடியை இழந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் அதன் நிகர லாபத்தில் 5 சதவிகிதம் வரையில் சரிவை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகர லாபத்தில் சரிவு
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகம் பாதிக்கப்பட்டதால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது.
நிகர லாபத்தில் ரூ 16,563 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மொத்த வருவாய் என்பது கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ 2.38 லட்சம் கோடியில் இருந்து ரூ 2.4 லட்சம் கோடி என அதிகரித்துள்ளது.
தெரியாதவர்களுக்கு, ரிலையன்ஸ் நிறுவனமானது தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.18.59 லட்சம் கோடியுடன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் இரண்டாவது காலாண்டில் 3.53 சதவிகிதம் இழப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |